பிரதமர் மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் ரயில் விபத்துகள் அதிகரித்துள்ளதாக ( Congress MP Rahul Gandhi ) காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் கடந்த சில ஆண்டுகளில் ஏராளமான ரயில் விபத்துகள் நடந்துள்ளது.
இந்த விபத்துகளில் மட்டும் 500கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் . இதுமட்டுமின்றி பலர் கை , கால்களை இழந்து தனது அன்றாட பணிகளை செய்யமுடியாமல் திணறி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மேற்கு வங்கம் மாநிலத்தில் நிகழ்ந்த கோர ரயில் விபத்தில் 15 கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் . 100 க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் வாழும் பெரும்பாலான மக்கள் ரயிலில் பயணம் செய்து வரும் நிலையில் இதுபோன்ற ரயில் விபத்துகள் அடிக்கடி நடைபெறுவது மிகுந்த வேதனை அளிப்பதாகவும் மத்திய அரசு இதுகுறித்து தீவிர ஆலோசனை செய்து இனி இதுபோன்ற கோர ரயில் விபத்துகள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் அரசியல் தலைவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் ரயில் விபத்துகள் அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
மோடி அரசின் நிர்வாக திறமையின்மை, அலட்சியப் போக்கு காரணமாக ரயில் விபத்து அதிகரித்துள்ளதாகவும் . ( Congress MP Rahul Gandhi ) பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட்டு ரயில் விபத்திற்கு மோடி அரசை பொறுப்பேற்க செய்வோம் எனவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.