தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில் இதனை கட்டுக்குள் கொண்டுவர அம்மாநில அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்தியாவின் தலைநகரமாக விளங்கும் டெல்லியில் காற்றின் தரத்தை மேம்படுத்த அம்மாநில எத்தனையோ நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் அவை சிறிதளவு மட்டுமே பயன் தருவதால் காற்றின் தரத்தை மேம்படுத்த முடியாத சூழல் நிலவி வருகிறது.
டெல்லியில், காற்று மாசு கலந்த பனிமூட்டம் காரணமாக கடந்த இரு நாட்களில் 300-க்கு மேற்பட்ட விமானங்கள், 12 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் தற்போது டெல்லி அரசி கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
Also Read : நீங்களும் இப்படி தான் வைப்பீங்களா – Password குறித்த ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!
காற்று மாசைக் கட்டுப்படுத்த டெல்லியில் இன்று முதல் தீவிர நடவடிக்கைகள் அமலுக்கு வந்துள்ளது .
கட்டுமான இடிப்பு நடவடிக்கைகளுக்குத் தடை.
சுரங்கம், சாலை, போரிங், துளையிடும் பணிகளுக்கு கட்டுப்பாடு.
முக்கிய சாலைகளில் தண்ணீர் தெளித்தல் கட்டாயம்.
மின்சார வாகனம், சிஎன்ஜி வாகனம், பி.எஸ்- VI டீசல் பேருந்துகள் தவிர அண்டை மாநிலங்கள் இடையேயான பேருந்துகள் நுழைவதற்குத் தடை விதிக்கப்படுவதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது.