வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை கண்காணிக்க ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை (veliyangiri) திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள உலக பிரசக்தி பெற்ற வெள்ளியங்கிரி மலை அமைந்துள்ளது . இந்த மலைக்கு ஆண்டு தோறும் உள்ளூர் மற்றும் வெளி ஊர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்கதர்கள் வருகை தருவார்கள்.
Also Read : கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் ; No சீருடை – தமிழக அரசு முடிவு
அடர்ந்த வனப்பகுதி என்பதால் அந்த மலை பகுதியில் ஏராளமான வனத்துறையினர் பாதுகாப்பு மற்றும் தீவிர கண்காணிப்பு பணிகளில் சுழற்சி முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை கண்காணிக்க ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Also Read : தலைவர் 171’ படத்தின் டைட்டில் டீஸர் குறித்து இயக்குநர் லோகேஷ் போட்ட டக்கர் ட்வீட்…!!
வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் காட்டுத்தீ ஏற்படுவதை தடுக்கவும், நாளை சித்ரா பௌர்ணமியை ஒட்டி அதிகமான கூட்டம் இருக்கும் என்பதால் பக்தர்களை கண்காணிக்கவும் (veliyangiri) ட்ரோன் பயன்படுத்தப்பட உள்ளதாக வனத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.