இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் (England) போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடி சதம் விளாசி அசத்தியுள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி விசாகப்பட்டினத்தில் கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது.
இதில் இந்திய அணி வென்றி பெற்றது. இதன் மூலம் இந்த தொடரில் இதுவரை 2 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா 1 போட்டி என வெற்றி பெற்றன.
இந்த தொடர் 1-1 என சம நிலையில் உள்ள நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் பிப்ரவரி 15ம் தேதி தொடங்கியது.
இந்திய அணியில் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரஜத் படிதார், சர்ப்ராஸ் கான், துருவ் ஜூரெல், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், குல்தீப் யாதவ், பும்ரா, முகமது சிராஜ். ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதில் இன்று நடைபெற்ற பேட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடி சதம் விளாசி அசத்தியுள்ளார்.
இதையும் படிங்க : IND vs ENG : 3வது டெஸ்ட் போட்டி! -அஸ்வின் திடீர் விலகல்
இங்கிலாந்து அணிக்கு (England) எதிரான தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய ஜெய்ஸ்வால் முதல் போட்டியில் அரைசதம் விளாசினார்.
தொடர்ந்து 2வது டெஸ்டில் இரட்டை சதம் விளாசி சாதனை படைத்தார். இந்த நிலையில் 3வது டெஸ்டின் களமிறங்கிய ஜெய்ஸ்வால் முதல் இன்னிங்ஸில் 10 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 319 ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி 126 ரன்கள் முன்னிலை பெற்றது.
பின்னர் ரோகித் சர்மா – ஜெய்ஸ்வால் கூட்டணி 2வது இன்னிங்ஸை தொடங்கியது. இதில் கேப்டன் ரோகித் சர்மா 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து விளையாடிய ஜெய்ஸ்வால் 25 ஓவர்களை வரை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
https://x.com/ITamilTVNews/status/1758762833599463886?s=20
தொடர்ந்து விளையாடி 49 ரன்களில் இருந்த போது சிக்சர் அடித்து அரைசதம் கடந்த ஜெய்ஸ்வால், அதன்பின் மார்க் வுட் பவுலிங்கில் பவுண்டரி அடித்து 122 பந்துகளில் சதம் விளாசினார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வால் அடிக்கும் 3வது சதம் இதுவாகும்.