இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,954 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவியதை அடுத்து அதனை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதோடு, தடுப்பூசிகளும் முழுவீச்சில் செலுத்தப்பட்டு வருகின்றன. இதனை அடுத்து கொரோனா தொற்று படிப்படியாக குறைவடைந்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவடைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக சற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 29 ஆம் தேதி 6,999 ஆக குறைந்திருந்த கொரோனா பாதிப்பு, நேற்று சற்று அதிகரித்து, 8 ஆயிரத்து 309 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 8,954 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இதில் கேரளாவில் மட்டும் 4,723 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 267 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பாதிப்பில் இருந்து 10,207 பேர் வீடு திரும்பி உள்ள நிலையில், கொரோனா தொற்றால் தற்போது 99,023 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.