பார்டர் கவாஸ்கர் தொடரின் 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியின் இறுதி நாளான இன்று காலை தொடர்ந்து ஆஸ்ட்ரேலிய அணி பேட்டிங்கை தொடர்ந்தது. நேற்று தொடக்க வீரராக களமிறங்கிய குன்மேன் இன்று அவுட்டாக, பின்னர் ஹெட் – லாபூஷக்னே பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். ஆஸ்ட்ரேலிய பேட்ஸ்மேன்களுக்கு சிக்கலாக அமையும் என்று நினைத்த சுழல் பந்து வீச்சை பேட்ஸ்மேன்கள் சுலபமாக எதிர்கொண்டு ரன் சேர்த்ததால் இறுதி நாள் போட்டி டிரா நோக்கி செல்ல ஆரம்பித்தது.
நிதானமாக விளையாடிய இந்த ஜோடி 109 ரன்கள் சேர்த்தது. 90 எடுத்த நிலையில் ஹெட் வெளியேறினார். பின்னர் ஸ்மித் – லாபூஷக்னே சிறிது நேரம் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.ஒரு கட்டத்தில் விக்கெட் ஏதும் விழாமல் ஆஸ்ட்ரேலியா விளையாடி வர போட்டியில் 20 ஓவர்கள் மட்டுமே மீதம் இருந்தது. இதனை தொடர்ந்து போட்டியை டிரா செய்துகொள்ள அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா முடிவெடுத்தார். எனவே இந்த போட்டியை டிராவில் முடித்துக்கொண்டனர்.
4 போட்டிகள் அடங்கிய இந்த தொடரை இந்திய அணி முதல் இரண்டு போட்டியில் வென்றது, 3 வது போட்டியில் ஆஸ்ட்ரேலியா வெற்றி பெற்றது. இறுதி போட்டி டிராவில் முடிந்ததால் 4 போட்டிகள் அடங்கிய தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.
தொடர்ந்து இரண்டுவது முறையாக இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பையை கைபற்றி அசத்தியது. இந்த போட்டியில் அசத்தல் சதம் விளாசி போட்டியின் இக்கட்டான சூழ்நிலையில் 186 ரன்கள் சேர்த்து அணியை நிலை பெற செய்த அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த தொடரில் பவுலிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலும் அசத்திய தமிழக அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இரண்டு பேருக்கும் தொடர் நாயகன் விருது பகிர்ந்து கொடுக்கப்பட்டது.