பங்களாதேஷுக்கு சுற்று பயணம மேற்கொண்டுள்ள இந்தியா அணி தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது தேடஸ்ட் போட்டியில் இந்தியா அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் பெரும் வெற்றி பெற்றது. இதனையடுத்து இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.
இந்த போட்டியில் காயம் காரணமாக அணி தலைவர் ரோஹித் ஷர்மா மற்றும் வேக பந்து வீச்சாளர் சைனி இந்த போட்டியில் விளையாடமாட்டார்கள் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த போட்டியில் இடது கை வேக பந்து வீச்சாளர் உணத்கட் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த போட்டயின் மூலம் டெஸ்ட் போட்டிகளில் முதன்முறையாக களமிறங்கவுள்ளார்.
அதிர்ச்சியூட்டும் செயலாக சென்ற போட்டியில் சிறப்பாக பந்து வீசி 8 விக்கெட்களை கைபற்றிய குல்தீப் யாதவ் இந்த போட்டியில் களமிறக்கபடவில்லை. இவருக்கு பதிலாக தான் உணத்கட் விளையாடவுள்ளார். டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. முதல் நாள் உணவு இடைவேளை நிலவரப்படி பங்களாதேஷ் அணி 2 விக்கெட் இழந்து 82 ரன்கள் குவித்துள்ளது.
மொமினுல் 23 ரன்களுடனும், ஷாக்கிப் அல் ஹசன் 16 ரங்களுடனும் விளையாடி வருகின்றனர்.