சீனாவில் கடந்த 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றுள்ள இந்திய வீரர் வீராங்கனைகள் பதக்கங்களை வென்று குவித்து வருகின்றனர்.
அந்தவகையில் ஆசிய பாரா விளையாட்டு போட்டியின் மகளிருக்கான (டி-20 பிரிவு) 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் ஜீவன்ஜி தீப்தி பங்கேற்று 56.69 நொடிகளில் இலக்கை கடந்து தங்கம் வென்று அசத்தியுள்ளார் .
ஜீவன்ஜி தீப்தியின் இந்த வேகம் (56.69 நொடிகள்) ஆசிய அளவில் சாதனையாகவும் பதிவாகியுள்ளது. இதையடுத்து , மகளிருக்கான (டி-12 பிரிவு) 100 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் சிம்ரன் சர்மா வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
இந்நிலையில் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் 17 விளையாட்டுப் பிரிவுகளில் பங்கேற்றுள்ள 303 வீரர் – வீராங்கனைகள் பதக்கங்கள் பல வென்று நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.