மத்திய இடைக்கால பட்ஜெட் தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் ‘இல்லாநிலை’ பட்ஜெட் (Not guaranteed) என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
டெல்லி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இதையடுத்து இன்று மத்திய அரசின் 2024-25ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்ட தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மத்திய அரசின் 2024-25ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 6வது முறையாக நாடாளுமன்ற மக்களவையில் பட்ஜெட் தாக்கல் செய்து உரையாற்றினார்.
வருமான வரி விதிக்கும் முறையில் எந்த மாற்றமும் இல்லை என்பது உட்பட 10 முக்கியமான அறிவிப்புகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட்டில் வெளியிட்டு உள்ளார்.
மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்ட இந்த இடைக்கால பட்ஜெட்டுக்கு பலர் ஆதரவு தெரிவித்து வந்தாலும் சிலர் கடும் எதிர்ப்பை பகிரங்கமாக காட்டி வருகின்றனர்.
அந்தவகையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து விமர்சித்துள்ள (Not guaranteed) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது :
மத்திய இடைக்கால பட்ஜெட் தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் ‘இல்லாநிலை’ பட்ஜெட் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்தார்.
ஆட்சிக்காலம் முடியப் போகிறது என்ற அலட்சியம்தான் இடைக்கால பட்ஜெட்டில் தெரிகிறது.
எடை போட்டுப் பார்க்க ஏதுமில்லாத வெற்று அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
இடைக்கால பட்ஜெட் எதிர்காலப் பயன்களுக்கு உத்தரவாதம் தருவதாகவும் இல்லை”
Also Read : https://itamiltv.com/khelo-india-competitions-udayanidhi-pride/
இதேபோல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் குறித்து விமர்சித்துள்ள மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கூறியதாவது :
கடந்த பத்து ஆண்டுகளில் நாடு முழுவதும் 15 எய்ம்ஸ்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்தார். ஒரு சிறு திருத்தம். 15 எய்ம்ஸ்களும் ஒரு செங்கல்லும் என தெரிவித்தார்.