உலகை திரும்பி பார்க்க வைத்த இஸ்ரோவின் சந்திரயான் -3 விண்கலத்தின் ( siva sakthi ) விக்ரம் லேண்டர் தரை இறங்கிய பகுதிக்கு பிரதமர் மோடியால் சூட்டப்பட்ட ‛ சிவசக்தி’ என்ற பெயருக்கு சர்வதேச வானியல் ஒன்றியம் அங்கீகாரம் அளித்துள்ளது.
கடந்த ஆண்டு ஆக- 23 ம் தேதி இஸ்ரோ விஞ்ஞானிகளால் அனுப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. இதற்காக பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையக கட்டுப்பாட்டு மையத்திற்கு சென்ற பிரதமர் மோடி விஞ்ஞானிகளை மனதார பாராட்டினார்.
இதையடுத்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியதை குறிக்கும் வகையில் ஆக.,23ம் தேதி ‛ தேசிய விண்வெளி தினம்’ ஆக கொண்டாடப்படும் என அறிவித்ததுடன், நிலவில் விக்ரம் லேண்டர் தடம் பதித்த பகுதிக்கு ‛சிவசக்தி’ என பெயர் வைக்கப்பட்டது .
இந்நிலையில், பிரதமர் மோடி சூட்டிய ‛ சிவசக்தி ‘ என்ற பெயருக்கு சர்வதேச வானியல் ஒன்றியம் அங்கீகாரம் அளித்து உள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பகுதிக்கு சூட்டப்பட்ட ( siva sakthi ) ‛சிவசக்தி’ என்ற பெயருக்கு, கோள்களுக்கு பெயர் சூட்டுவதற்கான சர்வதேச வானியல் ஒன்றியத்தின் செயற்குழு அங்கீகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.