பஞ்சாப்பில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் போலீசாரால் (International Drug Trafficking) கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பியும் ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் போதைப்பொருள் கடத்தல் அதிகம் நடைபெற்று வருவதாக கிடைத்த தகவலின் பேரில்
அம்மாநிலம் முழுவதும் போதைப்பொருள் கடத்தல் கும்பலை பிடிக்க தீவிர சோதனை நடத்தப்பட்டது .
இந்நிலையில் சல்லடை போட்டு தேடியதன் விளைவாக சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த 9 பேர் கைது அம்மாநில தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கடத்தல் கும்பலிடம் இருந்து சுமார் 22 கிலோ அபின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும், ரூ.9 கோடி மதிப்பிலான 30 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதுமட்டுமின்றி போதைப்பொருள் கடத்தலில் கிடைத்த பணத்தின் மூலம் (International Drug Trafficking) வாங்கிய ரூ.6 கோடி மதிப்புடைய சொத்துக்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.