பழனியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது.
இந்த விழாவின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள 100 அடி உயர கொடிக் கம்பத்தில் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் கொடியை ஏற்றி வைத்தார்
மாநாட்டு நுழைவாயிலில் மழை வடிவிலான பிரம்மாண்டமான செட்-ல் சிவன்,பார்வதி, முருகன் விநாயகர், அருணகிரிநாதர், வீரபாகு போன்ற உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Also Read : உலகின் 2-வது மிகப்பெரிய வைரம் போட்ஸ்வானாவில் கண்டுபிடிப்பு..!!
முகப்பில் ஆறுபடை வீடு அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டுக்கு வரக்கூடிய பக்தர்கள் அனைவருக்கும் முருகனின் ராஜ அலங்கார படம், திருநீறு, குங்குமம், 200 கிராம் பஞ்சாமிர்தம், கந்த சஷ்டி புத்தகம், லட்டு, முறுக்கு ஆகியவை அடங்கிய பிரசாத பைகள் வழங்கப்பட உள்ளன.
இன்றும், நாளையும் நடைபெறும் இந்த சிறப்புமிகு மாநாட்டில் ஆன்மிக சொற்பொழிவு, கருத்தரங்கம், நாடகம், நாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மாநாட்டு வளாகத்தில் 2,000 பேர் அமரும் வகையில் பிரமாண்ட அரங்கம், 500 பேர் சாப்பிடும் வகையில் உணவுக் கூடம் அமைக்கப்பட்டுள்ளன.