ஓமியம் நிறுவனத்தின் மூலம் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு 400 கோடி முதலீட்டை பெற்றுள்ளோம், இதன் மூலம் 500 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
இந்த ஒப்பந்தம் பசுமை எரிசக்தி உற்பத்திக்கான சுற்றுச்சூழலை தமிழ்நாட்டில் வளர்த்து, நிலையான எதிர்காலத்தை உருவாக்கும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் முதலீடுகள் பெற அமெரிக்க சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று பல்வேறு முதலீடுகளை பெற்று வருகிறார்.
இதையடுத்து அமெரிக்காவில் வசித்து வரும் தமிழ் மக்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் அவர்கள் முன் உரையாற்றினார் .
நாடு விட்டு நாடு வந்து தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்து வரும் அங்குள்ள தமிழர்களிடம் முதல் ஸ்டாலின் கூறியதாவது :
கடந்த 3 ஆண்டுகளாக அதிகமாக அமெரிக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள்;
இந்திய வம்சாவளி மக்களும் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அமெரிக்க நிறுவனங்களை தூண்ட வேண்டும்;
Also Read : கல்பனா சாவ்லா மரணத்தால் பொறுமைகாக்கும் நாசா – சுனிதா வில்லியம்ஸின் தற்போதைய நிலை என்ன..?
ஒரு செடியையோ, மரத்தையோ ஒரு இடத்திலிருந்து எடுத்து இன்னொரு இடத்தில் நட்டால் எல்லா செடியும் மரமும் அங்கு வளருவது இல்லை; ஆனால், நீங்கள் எல்லோரும் நாடுகள் கடந்து வந்திருந்தாலும் மிக மிக சிறப்பாக வளர்ந்திருக்கிறீர்கள்;
இது தான் நம்முடைய இந்தியருடைய பெருமை;
இது தான் அமெரிக்காவின் வளம்”
“சிலர் விரும்பி வந்திருக்கலாம், சிலரை சூழ்நிலைகள் துரத்தியிருக்கலாம்; உங்களில் சிலர் வசதியான சூழ்நிலையிலிருந்து வந்திருக்கலாம், சிலர் வசதி குறைவினாலும் கூட இங்கு வந்திருக்கலாம்;
ஆனால், இன்று எல்லோரும் உன்னதமான இடத்தை பிடித்திருக்கிறீர்கள் என்றால், அதற்கு காரணம் உங்களது உழைப்பும், அறிவும், திறமையும், தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் தான் காரணம்;
வேற்றுமையில் ஒற்றுமை என்பது தான் நம்முடைய நாட்டின் வளர்ச்சிக்கு காரணம்; வேற்றுமை எண்ணம் துளியும் இல்லாமல் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற ஒற்றுமை உணர்வோடு வாழ வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.