2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரை எதிர்நோக்கி அனைவரும் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் இன்று இந்த தொடருக்கான மெகா ஏலம் நடைபெற உள்ளது.
சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இன்று மற்றும் நாளை என இரண்டு நாள்கள் நடைபெறும் ஐபிஎல் மெகா ஏலத்தில் 577 வீரர்களின் பெயர்கள் இடம் பிடித்துள்ளன . இதில் 367 இந்திய வீரர்களும் 210 வெளிநாட்டு வீரர்களும் தேர்வாகி உள்ளனர்.
10 அணிகளும் 70 வெளிநாட்டு வீரர்களையும் சேர்த்து, அதிகபட்சமாக 204 வீரர்களை ஏலத்தில் எடுக்க முடியும்.
Also Read : பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு..!!
இந்த ஐபிஎல் ஏலத்தில் 110.5 கோடி கையிருப்புடன் முதல் இடத்தில் பஞ்சாப் அணியும், 41 கோடியுடன் ராஜஸ்தான் அணி கடைசி இடத்திலும் உள்ளது.
பெங்களூரு 83 கோடி, டெல்லி – 73 கோடி, லக்னோ மற்றும் குஜராத் 69 கோடி, சென்னை 55 கோடி, கொல்கத்தா 51 கோடி, சன்ரைசர்ஸ் மற்றும் மும்பை 45 கோடியில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த மெகா ஏலத்தில் எந்த அணிக்கு எந்தெந்த வீரர்கள் ஏலம் எடுக்கப்பட போகிறார்கள் என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.