இஸ்ரேல் மீது ஈரான் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் தற்போது இஸ்ரேல் பிரதமரைக் கொல்லப்போவதாக ஈரான் மிரட்டல் விடுத்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
ஹிஸ்புல்லா தலைவர் மற்றும் முக்கியத் தளபதிகள் மீது குண்டு வீசி இஸ்ரேல் ராணுவம் கொலை செய்ததற்கு பதிலடியாக, கடந்த திங்கள் இரவு 200க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது .
Also Read : அடுத்தமுறை ஆட்சிக்கு வரமாட்டோம் என்பதால் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி- டிடிவி தினகரன்
இதன்காரணமாக இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவில் வரும் நிலையில் இரு நாடுகளை சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கொல்லப்போவதாக ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது . பிரதமர் பெஞ்சமின் உள்ளிட்ட பலரை பயங்கரவாதிகள் என பட்டியலிட்டு ஈரான் அரசு பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளதாக உளவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.