இறையூர் கிராமத்தில் ஆதிதிராவிடர்கள் குடியிருக்கும் பகுதியில் உள்ள உயர்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பிரச்சனையை கிளப்பியது.
இது தொடர்பாக பல்வேறு தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் ஆய்வு பணியை மேற்கொண்ட அதே வேளையில் நேற்று 12 மணி அளவில் கிராமத்திற்கு பிரபல யூட்யூப் செய்தியாளர் சவுக்கு சங்கர் இன்று வருகை தந்தார்.
இறையூர் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிட பொதுமக்களை சந்தித்த சவுக்கு சங்கர் நடைபெற்ற விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டார். இதை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த சவுக்கு சங்கர்,
இறையூர் கிராமத்தில் நடைபெற்ற விவகாரங்கள் குறித்து பொதுமக்களிடம் கேட்டு தெரிந்து கொண்டதாகவும் வெள்ளனுர் காவல் துறையினர் மோசமான விசாரணை மேற்கொண்டு இருப்பதாகவும், சிபிசிஐடி விசாரணை மாற்றப்பட்டுள்ளதை வரவேற்பதாகவும் தெரிவித்த அவர், இறையூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர் ஆதிதிராவிட பொதுமக்களுக்கு எதிராக செயல்படும் நபராக இருப்பதாகவும் அதை தான் கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனைத் தவிர வேறு எந்த அரசியல் கட்சிகாரர்களும் இந்த விவகாரம் குறித்து கருத்து கூறவில்லை என்றும் குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் ரகுபதி உள்ளிட்ட யாரும் வரவில்லை என பகிரங்க குற்றச்சாட்டினார்.
மேலும் ஆதிதிராவிடக்காலனின் புதிதாக கட்டப்பட்டு வரும் உயர் நிலை நீர் தேக்க தொட்டியை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் அனைத்து ஜாதியினருக்கும் பொதுவான குடிநீர் தொட்டியில் இருந்து ஆதிதிராவிடர் காலனிக்கு குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மேலும் திமுக தலைவர் ஸ்டாலின், ஜல்லிக்கட்டுக்கு சென்ற அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலின் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு வருகை தராது வருத்தம் அளிப்பதாகவும், ஆளுங்கட்சியினர் செயல்படாத கட்சியாக இருப்பதாகவும் பகிரங்க குற்றம் சாட்டினார்,