பல மாதங்களை நடைபெற்று வரும் இஸ்ரேல் – பாலஸ்தீன் போரால் 25 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்கள் (isreal palestine war) உயிர் இழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
பாலஸ்தீனர்களின் ஹமாஸ் அமைப்பிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே பல ஆண்டுகளாக இருந்து வரும் தீரா பகையின் காரணமாக கடுமையான மோதல்கள் தொடர்ந்து வருகிறது .
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் மிகப் பெரிய ஏவுகணை தாக்குதலை நடத்தினர்.
இந்த கோர தாக்குதலில் இஸ்ரேலில் வசிக்கும் பல அப்பாவி மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர்.
இது மட்டும் இன்றி 100க்கும் மேற்பட்டோரையும் ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
ஹமாஸ் அமைப்பினரின் இந்த கொலைவெறி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல், பாலஸ்தீனர்களின் எஞ்சிய நிலப்பரப்பின் மீது இடைவிடா தாக்குதல்களை நடத்தி வருகிறது .
இதற்கிடையில் ஹமாஸ் தலைவர்களுடன் பிணைக்கைதிகளை விடுவிப்பதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலின் கோரிக்கைக்கு செவி சாய்த்து 50 பிணைக்கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டனர்.
இதேபோல் ஹமாஸ் அமைப்பினர் வைத்த சில கோரிக்கைகளை ஏற்கும் வகையில் காஸாவில் 4 நாட்களுக்கு தற்காலிக போர்நிறுத்தம் செய்யப்பட்டது .
இதையடுத்து காஸாவில் பிணைக் கைதிகளாக உள்ள 50 பெண்கள், குழந்தைகளை விடுவித்த ஹமாஸ் அமைப்பினர் மேலும் சில பிணைக் கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டனர் .
இதன்காரணமாக காஸாவில் மேலும் 2 நாட்கள் போர்நிறுத்தம் நீட்டிப்பு செய்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்திருந்தார் .
இந்நிலையில் இஸ்ரேல் – பாலஸ்தீன் போர் மீண்டும் கொடூரமாக நடைபெற்று வருகிறது எங்கு பார்த்தாலும் குண்டு மழை பெய்வது போல் தெரிகிறது.
அழுகை குறைகளும் அடுக்கடுக்கான பிணங்களை அந்நாட்டை பார்ப்பதற்கே எதோ படத்தில் வரும் போர் காட்சிகளை போல் தெரிகிறது.
Also Read : https://itamiltv.com/emergency-movie-release-date-announcement/
இந்நிலையில்,காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 190 பேர் உயிரிழந்தனர் மற்றும் 340 பேர் காயமடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
(isreal palestine war) இதுவரை மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25,295-ஆக அதிகரித்துள்ளது.
இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை சுமார் 63,000 பேர் காயமடைந்து உள்ளதாகவும் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.