புதுவை மற்றும் தெலங்கானா ஆளுநராக இருக்கும் தமிழிசை சவுந்திரராஜன் (Governor tamilisai) தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அரசியல் குடும்பத்தில் வளர்ந்த சௌந்தரராஜன் சிறுவயதிலிருந்தே அரசியலில் ஆர்வத்தால் 1999-ல் பாஜக உறுப்பினராக இணைந்து கொண்டார். அதன் பின் தென் சென்னை மாவட்ட மருத்துவப் பிரிவு செயலாளராக இருந்தார்.
2001 இல் மாநில பொதுச் செயலாளர் மருத்துவப் பிரிவு, அகில இந்திய இணை கன்வீனர் (தென் மாநிலங்களுக்கான மருத்துவப் பிரிவு)
2005 இல், மாநிலப் பொதுச்செயலாளர் முதல் தமிழ்நாடு மாநில பாஜக பிரிவுக்கு பல்வேறு பதவிகளில் பணியாற்றியாவர் தமிழிசை சவுந்திரராஜன்.
பின்னர் 2007 இல் செயலாளர், 2010 இல் மாநிலத் துணைத் தலைவர் மற்றும் 2013 இல் அகில இந்திய பாஜக தேசிய செயலாளராக உயர்த்தப்பட்டார்.
இதனை தொடர்ந்து பாஜகவின் வளர்ச்சிக்காக பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளார்.
அவரது அயராத உழைப்பு அவரை அடிமட்ட தொண்டரில் ஆரம்பித்து 15 ஆண்டுகளில் தமிழக பாஜக மாநில தலைவராக உயர்ந்த்தியது.
தமிழகத்தில் பட்டி தொட்டி எங்கும் பாஜகவை வளர்க்க தீவிரமாக களத்தில் இறங்கினார். அவரின் தாமரை மலந்தே தீரும் என்னும் அவரது முழக்கம் தமிழகம் முழுவதும் வேகமாக பரவியது.
மக்கள் பணிகளிலும் கட்சி பணியிலும் தீவிரமாக இருந்தவர் பல முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார். ஆனால் வெற்றி வாய்ப்பு அவரை நெருங்கவில்லை.
இதையும் படிங்க : Kantara 2 – புது அப்டேட் கொடுத்த படக்குழு
கடந்த 2019ஆம் ஆண்டு தூத்துக்குடி தொகுதியில் தமிழிசை போட்டியிட்டார். இதில் சுமார் 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கனிமொழியிடம் தோற்றார்.
மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த ஒரு சில மாதங்களிலையே தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை (Governor tamilisai) நியமிக்கப்பட்டார். மேலும் புதுவைக்கும் துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.
ஆளுநராக நியமிக்கப்பட்டாலும் திமுகவை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்த தமிழிசை தற்போது நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் களத்தில் இறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
https://x.com/ITamilTVNews/status/1752303596547489970?s=20
இதனால் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாஜக சார்பாக வேட்பாளர் பட்டியல் வெளியான பின்பு ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாவும், எனவே மீண்டும் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட இருப்பதாகவும் தகவல் வெளியானது.