பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை தமிழ்நாடு அமைச்சர்கள் புறக்கணிப்பது நல்லதல்ல என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை கூறியதாவது :
ஆளுநரின் பொது நிகழ்ச்சிகளை புறக்கணித்தால் பரவாயில்லை ஆனால், பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியை உயர் கல்வித்துறை அமைச்சர் புறக்கணிப்பது நல்லதல்ல. அவை அரசியலை தாண்டி நடக்கும் நிகழ்வுகள். பட்டம் பெரும் மாணவர்களுக்கு அமைச்சர் என்ற வகையில், நல்வழியை காட்டுவதற்கு முறை இருக்கும். அதை புறம் தள்ளுவது சரி அல்ல.
Also Read : Digital Arrest Scam – புது ரக ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட 4 பேர் குஜராத்தில் கைது..!!
அரசியலையும், கல்வியையும் கலப்பது தமிழகத்தின் வாடிக்கையாகி விட்டது. புதிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கை, துணைவேந்தர்களின் நியமனம், பட்டமளிப்பு விழா புறக்கணிப்பு என அனைத்தையும் அரசியலாக்கி வருகிறார்கள் என்பது வேதனை.
அடிப்படை கல்வியிலும் அரசியல் புகுத்துகிறார்கள். மாற்று சிந்தனைகள் இருந்தாலும், கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கக் கூடாது என தெரிவித்தார்.