மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி கொடுக்க வேண்டும் என சொல்வோர், இந்து பெண்கள் நெற்றியில் பொட்டு ( H.Raja ) வைக்கக் கூடாது, கோயிலில் கொடுத்த கயிறுகளை கட்டக் கூடாது என்பது தவறு என ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா கூறியதாவது :
பள்ளிகளில் சாதி பிரச்சனைகளை தவிர்ப்பதற்கு அரசுக்கு ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு வழங்கிய பரிந்துரைகள் பெரும்பான்மை சமூகத்தை குறிவைக்கும் வகையில், பெரும்பான்மை சமூகத்திற்கு எதிராக உள்ளது.
மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி கொடுக்க வேண்டும் என சொல்வோர், இந்து பெண்கள் நெற்றியில் பொட்டு வைக்கக் கூடாது, கோயிலில் கொடுத்த கயிறுகளை கட்டக் கூடாது என்பது தவறு. நெற்றியில் திருநீறு, குங்குமம் வைக்க கூடாது என அந்த பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது. நான் சிவப்பு கயிறு கட்டியுள்ளேன், இது எந்த சாதிக்கான கயிறு? என் அருகில் இருப்பவர் கருப்பு கயிறு கட்டியுள்ளார் அது எந்த சாதிக்கு அடையாளம்?
நீதிபதி சந்துருவின் பரிந்துரைகளை முழுவதுமாக நிராகரிக்க வேண்டும் என அரசிடம் பாஜக சார்பில் கோரிக்கை வைக்க உள்ளோம். திமுக வாக்கு வங்கி இந்த தேர்தலில் 6 சதவீதம் குறைந்துள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவின் ( H.Raja ) வாக்கு வங்கி மேலும் குறையும் என ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.