பாஜக நிகழ்ச்சியில் பங்கேற்ற நகர்களுக்கும் விஜய் மக்கள் இயக்கத்திற்க்கும் எந்த தொடர்பும் இல்லை என அந்த இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார் .
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த புஸ்ஸி ஆனந்த் கூறியதாவது:
தளபதி விஜய் மக்கள் இயக்கக் கொடியோடு மாற்றுக்கட்சி நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக செய்திகளில் வெளியான நபர்கள் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் எந்த பொறுப்பிலும் இல்லை.

மாற்றுக்கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர்களுக்கும் தளபதி மக்கள் இயக்கத்திற்க்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதையடுத்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளதா…? என்ற செய்தியாளரின் கேள்விக்கு அமைதியாக புன்னகைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டார் புஸ்ஸி ஆனந்த்