விமானத்தில் அரை நிர்வாணமாக (semi naked) நடந்த பெண்ணை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்த்துள்ளனர்.
அபுதாபியில் இருந்து மும்பை சென்ற விமானத்தில் இத்தாலிய பெண் ஒருவர் ரகளையை ஏற்படுத்திய நிலையில், மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக ஏர் விஸ்தாரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இத்தாலியைச் சேர்ந்த “Paola Perruccio” ஏர் விஸ்டாரா விமானத்தில், பெண் ஒருவர் குடித்துவிட்டு எகானமி வகுப்பு டிக்கெட் இருந்தும் வணிக வகுப்பிற்கு மேம்படுத்தக் கோரத் தொடங்கினார்.
இந்நிலையில், அந்தப் பெண்ணின் கோரிக்கையை கேபின் குழுவினர் ஏற்க்க மறுத்ததால், அவர் தன் ஆடைகளில் சிலவற்றைக் கழற்றிவிட்டு, அரை நிர்வாண (semi naked) நிலையில் விமானத்தினுள் நடந்துள்ளார்.
இதனையடுத்து, மும்பையில் விமானம் தரையிறங்கியவுடன் புகாரின் பேரில் சஹார் போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர், அந்த பெண்ணிற்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து ஏர் விஸ்தாரா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“2023 ஜனவரி 30 அன்று அபுதாபியில் இருந்து மும்பைக்கு இயக்கப்படும் யுகே 256 என்ற விஸ்டாரா விமானத்தில் கட்டுக்கடங்காத பெண் பயணி ஒருவர் இருந்தார்.
மேலும், அவரது கட்டுக்கடங்காத நடத்தை மற்றும் வன்முறை நடத்தை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, கேப்டன் எச்சரிக்கை விடுத்தார்”
மற்றும் “பைலட் மற்ற வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வழக்கமான அறிவிப்புகளை செய்தார்.
மேலும், விமானம் தரையிறங்கியவுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
“இந்த சம்பவம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் SOP களின் படி புகாரளிக்கப்பட்டுள்ளது. விஸ்தரா அதன் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு, மற்றும் கண்ணியத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் கட்டுக்கடங்காத நடத்தைக்கு எதிராக அதன் பூஜ்ய சகிப்புத்தன்மை கொள்கையுடன் உறுதியாக உள்ளது.” எனவும் தெரிவித்துள்ளது.