காதல் முறிவுக்கு பிறகு காதலனை தொந்தரவு செய்து வந்த காதலிக்கு சிறை தண்டனை விதித்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
செவிலியராக பணிபுரியும் 30 வயதான சோஃபி, 50 வயதான மருத்துவரை காதலித்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் இவர்களது காதல் முறிந்து போக காதலியோ காதலனை பிரிய மனமில்லாமல் தவித்து வந்துள்ளார்.
இதையடுத்து காதல் முறிவுக்கு பிறகு தனது காதலனுக்கு ஒரே நாளில் 1000 முறை கால் செய்தும், அவரது காரில் கண்காணிப்பு சாதனத்தை பொருத்தியும் தொந்தரவு செய்து வந்துள்ளார்.
Also Read : திருவெறும்பூர் அருகே தலை துண்டித்து ரவுடி கொடூர கொலை – 3 பேர் கைது..!!
இதுமட்டுமின்றி காதலனின் ₹14 கோடி மதிப்புள்ள வீட்டின் கதவுகளை உடைத்து அவருக்கே தெரியாமல் அவர் வீட்டில் காத்திருந்துள்ளார்.
இதனை கண்டு கோபம் கொண்ட காதலன் இதுபோன்ற செயல்கள் தனக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு செல்ல காதலி சோஃபி கூல்வில்-க்கு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.