உலகப்புகழ் பெற்ற Tanjore திருக்கானுர்பட்டி ஜல்லிக்கட்டு இன்று காலை கோலாகலமாக தொடங்கியுள்ளது . இந்த போட்டியை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் கண்டுகளிக்கும் இப்போட்டிக்கு 700 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
போட்டிக்கு முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கான மருத்துவப் பரிசோதனை தொடங்கி நடைபெற்றது.
இதையடுத்து மாடு பிடி வீரர்களுக்கு ருத்துவப் பரிசோதனை தொடங்கி நடைபெற்றது. பின்னர் ஆட்சியர் தீபக் ஜேக்கப் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதி மொழியினை ஏற்றனர்.
இந்த மாபெரும் போட்டியில் வெற்றி பெறும் காளையின் உரிமையாளர், காளையருக்கு சிறப்பான தரமான பரிசு வழங்கப்படவுள்ளது.
காளைகளை அடக்கும் வீரர்களுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள், பீரோ, கட்டில், டிவி உள்ளிட்ட பரிசுகள் அளிக்கப்படவுள்ளன.
இந்தப் போட்டி குறைந்தபட்சம் 10 சுற்றுகளாக மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு சுற்றிலும் 50-லிருந்து 75 மாடு பிடி வீரர்கள் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறித்து .
காயமடையும் வீரர்கள் மற்றும் காளைகளுக்காக சுகாதாரத்துறை மற்றும் கால்நடைத்துறை சார்பாக சிறப்பு முதலுதவி சிகிச்சைக்கான மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும் கூடுதல் மருத்துவ சிகிச்சைக்காக Tanjore அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன.
இதற்காக வாடிவாசல் அருகே பல தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த போட்டியில் அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்கு ஏராளாமான போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சை மாநகர காவல்துறை சார்பாக 2000க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மாடுகளின் கொம்புகளைப் பிடிப்பதோ, அவற்றின் கால்களைப் பின்னுவதோ, மாட்டின் வாலை பிடிப்பதோ கூடாது எனவும் மாடுகளின் திமிலை மட்டுமே பிடிக்க வேண்டும் எனவும் விதிமுறைகள் உள்ளன
மேலும் காளை மூன்று சுற்றுகள் சுற்றும் வரை வீரர் இறுகப் பற்றியிருந்தாலோ அல்லது 100 மீட்டர் தூரம் வரை திமிலைப் பிடித்தவாறு சென்றாலோ மட்டுமே மாடுபிடி வீரர் வெற்றி பெற்றதாகக் கருதப்படுவார்.
தஞ்சையில் உள்ள பல்வேறு பகுதிகளில் பொதுமக்களும் ஜல்லிக்கட்டு விளையாட்டைக் கண்டு ரசிக்கும் வகையில் அம் மாவட்ட நிர்வாகம் சார்பாக ஆங்காங்கே பிரம்மாண்ட எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
வாடிவாசலிலிருந்து சீறிப் பாய்ந்து செல்லும் காளைகளை, உரிமையாளர்கள் சேகரிக்கும் இடம் வரை தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Also Read : https://itamiltv.com/udhayanithi-provide-incentive-to-tn-players/
இப்போட்டியில் அசம்பாவிதங்களை தவிர்க்க பல இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
போட்டிகளில் பங்கேற்று காளைகளைப் பிடிக்கும் வீரருக்கும் பிடிபடாமல் செல்லும் காளையின் உரிமையாளருக்கும் பீரோ, கட்டில் , அண்டா, தங்க நாணயம், மின்விசிறி, கேஸ் ஸ்டவ், சைக்கிள், உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.