ஜார்க்கண்ட் மாநிலத்தில் கலா ஜாரியா (jarkahand train accident) ரயில் நிலையம் அருகே பயணிகள் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது .
கலா ஜாரியா ரயில் நிலையம் அருகே நேற்று அங்கா எக்ஸ்பிரஸ் ரயில் நின்றுள்ளது. அப்போது ரயிலில் இருந்து சில பயணிகள் கீழே இறங்கியுள்ளனர். அந்த நேரம் பார்த்து மற்றொரு ரயில் வேகமாக வர கீழே இறங்கியவர்கள் மீது மோதி உள்ளது .
சுமார் 12 பயணிகள் மீது ரயில் மோதிருக்கலாம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இதர பயணிகளின் நிலை குறித்த விவரம் இன்று சரிவர கிடைக்கவில்லை.
பயணிகள் எமெர்ஜன்சி சங்கிலியை பிடித்து இழுத்து இறங்கியதால் எதிர் திசையில் வந்த ரயில் அவர்கள் மீது மோது விபத்து நடந்துள்ளதாக முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது .
Also Read : https://itamiltv.com/sl-santhan-shantans-body-going-to-sri-lanka/
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப்படையினர் (jarkahand train accident) இந்த விபத்தில் காயமடைந்தோர் மற்றும் உயிரிழந்தவர்களை மீட்டு வருகின்றனர் .
இந்த விபத்து குறித்த செய்தியறிந்த ஜார்க்கண்ட் மாநில முதல்வர் சம்பாய் சோரன் இந்த விபத்து மிகுந்த வருத்தத்தை தந்துள்ளதாகவும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.