நடிக்கப்போவதில்லை என முடிவெடுத்துள்ளதாக கோவா சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டபோது கூறி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன், குணச்சித்திர நடிகர் என எந்தவிதமான கதாபாத்திரத்தை கொடுத்தாலும், அந்த காதாபாத்திரமாகவே மாறிவிடுபவர் நடிகர் விஜய் சேதுபதி.
விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் என ஹிட் படங்களில் நடித்துள்ளார். தனது நடிப்புத் திறமையால் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாகிய நடிகர் விஜய் சேதுபதி கடந்த 2017-ம் ஆண்டு வெளியான விக்ரம் வேதா படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
இந்த கதாபாத்திரம் கதாபாத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து பேட்ட , மாஸ்டர், விக்ரம் என வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படங்கள் ஹிட்டானதால், பாலிவுட், டோலிவுட்டில் இருந்தும் வில்லனாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன.
இந்த நிலையில் சமீபத்தில் வெளிவந்த ஜவான் திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து இருந்தார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வென்றி பெற்றது.
இந்த நிலையில் அண்மையில் கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி, இனி வில்லனாக நடிக்கப்போவதில்லை எனக் கூறி இருந்தார்.
இதுகுறித்து பேசிய அவர், ரோக்கள் என்னிடம் கேட்டுக்கொண்டதால் தான் நான் பல படங்களில் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டேன். நிறைய அழுத்தம் இருப்பதால் இனி வில்லனாக நடிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளேன்.
வில்லனாக நடிக்கும்போது சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுகின்றன.
ஹீரோவை விட பவர்புல்லாக தெரிந்து விடக்கூடாது என்பதற்காகவே பார்த்து பார்த்து நடிக்க வைப்பார்கள். நான் நடித்த நிறைய காட்சிகள் எடிட்டிங்கில் கட் செய்யப்பட்டு விடுகின்றன. அதனால் சில வருடங்கள் வில்லனாக நடிக்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளேன் என விஜய் சேதுபதி கூறி இருக்கிறார்.