ஜெயம் ரவியின் 30-வது பட டைட்டிலை விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக படக்குழு வெளியிட்டுள்ளனர்.
தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஜெயம் ரவியும் ஒருவர். இவர் ‘ஜெயம்’, ‘எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’, ‘சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்’, ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ரொம்பவே பிஸியாக நடித்துவரும் ஜெயம் ரவி, அண்மையில் நடித்த பொன்னியின் செல்வன் படம், பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து பல படங்களில் ரவி கமிட்டாகியுள்ளார்.
அந்த வகையில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் புதிய படத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ளார். ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்த படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இதுதவிர நடிகை அனுபமா பரமேஸ்வரன், பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், சீதா, உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
ஜெயம் ரவியின் 30-வது படமான இது விறுவிறுப்பாக தயாராகி வரும் நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் விநாயகர் சதுர்த்தி தினமான இன்று வெளியிடப்பட்டு உள்ளது. இப்படத்திற்கு பிரதர் என பெயரிடப்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
https://x.com/actor_jayamravi/status/1703627533475106840?s=20
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2023/09/image-687.png?resize=435%2C680&ssl=1)
இப்படத்திற்கு பிரதர் என பெயரிடப்பட்டு உள்ளதால், இப்படத்தில் அண்ணன், தங்கை பாசம் முக்கிய பங்காற்றும் என தெரிகிறது.