நாட்டிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களான ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட பெரிய கல்வி நிறுவனங்களில் உயர்படிப்பில் சேர உதவும் ஜேஇஇ (JEE – MAIN) 2-ம் கட்ட முதன்மைத் தேர்வு முடிவுகள், வரும் ஏப்ரல் 25-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளதால் தேர்வெழுதிய மாணவர்கள் குஷியில் உள்ளனர்.
ஐஐடி, என்ஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களை மத்திய கல்வித்துறை அமைச்சகம் நடத்தி வருகிறது. இந்த கல்வி நிறுவனங்களில் இளநிலைப் படிப்புகளில் சேருவதற்கு ‘ஜேஇஇ’ எனப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஜேஇஇ தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இந்த ஐஐடி கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர வழிவகை செய்யப்படும். இவை ஜேஇஇ முதன்மைத் தேர்வு, பிரதானத் தேர்வு என இரு பிரிவாக ஆண்டுதோறும் 2 முறை நடைபெறும்.
Also Read: https://itamiltv.com/murder-of-four-members-of-the-same-family/
முதன்மை தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே பிரதான தேர்வை எழுத முடியும். முதன்மை தேர்வில் மட்டும் வெற்றி பெற்றவர்கள் என்.ஐ.டி. போன்ற கல்வி நிலையங்களில் சேர்ந்து படிக்க முடியும். அதே போல, ஜே இ இ பிரதான தேர்வில் வெற்றி பெற்றவர்கள் ஐ ஐ டி க்களில் சேர்ந்து படிக்க முடியும்.
இந்நிலையில் ஜேஇஇ முதன்மைத் தேர்வானது, NTA எனப்படும் தேசிய தேர்வுகள் முகமை மூலம் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2024-25-ம் கல்வி ஆண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மைத் தேர்வு கடந்த ஜனவரி 24 முதல் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து இந்த தேர்வை 12.25 லட்சம் பேர் எழுதினர். அதன் முடிவுகள் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி வெளியாகியுள்ளது.
தொடர்ந்து ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தேர்வு ஏப்ரல் 4 முதல் 9-ம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை நாடு முழுவதிலும் பல்வேறு நகரங்களைச் சேர்ந்த 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். இதற்கிடையே தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பை என்டிஏ கடந்த 12-ம் தேதி இணையதளத்தில் வெளியிட்டது.
Also Read : https://itamiltv.com/rs-1-5-crore-jewelery-robbery-at-gunpoint-by-breaking-into-jewelery-shop/
இதையடுத்து இதுதொடர்பாக பெறப்பட்ட கருத்துருகள் அடிப்படையில் இறுதி விடைக்குறிப்பு அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளது என்று என்டிஏ வட்டாரங்கள் தெரிவித்தன. அதைத் தொடர்ந்து விடைத்தாள் மதிப்பீடு, மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து, ஏற்கனவே அறிவித்தபடி தேர்வு முடிவுகள் ஏப்ரல் 25-ம் தேதி வெளியிடப்படும் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.
இதனால் தேர்வை எழுதியுள்ள மாணவர்கள் குஷியடைந்துள்ளனர். இது குறித்து தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் கூறும் போது, “தேர்வு முடிவுகளை jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் சென்று கொள்ளலாம். கூடுதல் தகவல்களை www.nta.ac.in என்ற என்டிஏ இணையதளத்திலும் அறியலாம்.
மாணவ, மாணவிகளுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-4075 69227700 என்ற தொலைபேசி எண் (JEE – MAIN) அல்லது jeemain@nta.ac.in மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்” என தெரிவித்துள்ளனர்.