வருகிற ஜனவரி மாதம் தென் ஆப்பிரிக்கா செல்லும் இங்கிலாந்து அணி அங்கு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதற்கான இங்கிலாந்து அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 14 பேர் கொண்ட இந்த அணிக்கு ஜாஸ் பட்லர் தலைமை தாங்குகிறார். சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடிய ஹாரி புரூக் அணியில் இடம்பெற்றுள்ளார்.
அணிக்கு பெரும் பக்கபலமாக பார்க்கப்படும் முன்னணி வேக பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் ஒரு நாள் அணிகக்கு திரும்பியுள்ளார். பல மாத காலமாக காயத்தால் அவதிப்பட்ட ஆர்ச்சர், இங்கிலாந்து அணியில் பங்கு பெறாமல் இருந்தார். சமீபத்தில் நடந்த 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியிலும் அவர் கலந்துக்கொள்ளவில்லை. சில மாததிற்கு முன்பு தான் தோள்பட்டை, மாற்றும் காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
இதனை தொடர்ந்து தற்போது அவர் மெல்ல காயத்தின் தாகத்திலிருந்து மீண்டு வருவதாக அவரது மருத்துவர்கள் மாற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. அதே போன்று வலை பயிற்சியிலும் ஆர்சர் நன்றாக பந்து வீசி வருவதாக அணியின் பயிற்சி குழு கூறுகின்றது. அடுத்த ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக ஆர்ச்சர் அணிக்கு திரும்பியுள்ளது பெரும் நம்பிக்கையும், புதுணர்ச்சியும் அளித்துள்ளது.
மற்றொரு முக்கிய வீரரான ஜோ ரூட் இந்த ஒருநாள் தொடரில் இடம்பெறவில்லை. இதற்கு முன்னதாக ரூட் டெஸ்ட் போட்டிகளில் அதிகம் விளையாடி வந்தார், மேலும் அடுத்து வரும் நியூசிலாந்து அணிகக்கு எதிரான ஒரு நாள், மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளதால் தற்போது அவருக்கு ஓய்வு தர முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.