இ.சி.ஆரில் அதிவேகமாக வாகனத்தை ஓட்டி ஒருவரை ஒருவர் முந்திச் செல்ல முயன்ற போதுது நிலை தடுமாறி விழுந்த விபத்தில் நீதிபதியின் மகன் அறிவரசி உயிரிழந்துள்ளார்.
வேலுார் மாவட்டம், சாத்துவாஞ்சேரியைச் சேர்ந்தவர் அறிவரசி (வயது 21) இவரது தாய் ரேவதி, வேலுாரில் நீதிபதியாக பணிபுரிகிறார்.
இந்த நிலையில் வேளச்சேரியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி, தரமணி, சட்ட பல்கலைக்கழகத்தில், 4ம் ஆண்டு படித்து வந்த அறிவரசி, நேற்று அதிகாலை, இவருடன் படித்து வந்த கொளத்துாரைச் சேர்ந்த முகமது பஷீர் (21) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் கோவளத்தில் இருந்து திருவான்மியூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
முகமது பஷீர், வாகனத்தை ஓட்டி சென்றுள்ளார். இவர்களுடன், மற்றொரு இருசக்கர வாகனத்தில் ஒரு ஜோடி சென்றது. இ.சி.ஆரில் அதிவேகமாக வாகனத்தை ஓட்டி ஒருவரை ஒருவர் முந்திச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது ஈஞ்சம்பாக்கம் அருகில் கட்டுப்பாட்டை இழந்த முகமது பஷீர் வாகனம், சாலை மைய தடுப்பில் மோதி, விபத்தில் சிக்கியது. இதில், தலையில் பலத்த காயமடைந்த அறிவரசி, அதே இடத்திலே பலியானார்.
காயமடைந்த முகமது பஷீர், அடையாறில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்டுள்ளார். இது குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாணை மேற்கொண்டு வருகிறனர்.
படிக்க வந்த இடத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.