காரைக்காலில் உள்ள திருப்பட்டினம் ஆயிரம் காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று காரைக்கால் மாவட்டம் முழுவதும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சிறப்பு வாய்ந்த ஆலயங்களில், திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட நாட்களை முன்னிட்டு, அந்தந்த மாவட்டங்களுக்கு மட்டும் தனியே உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருவது வழக்கம். அதே போன்று விருமுறை நாட்களுக்கு மாற்றாக வேறு ஒரு நாளை வேலை நாளாகவும் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் காரைக்கால் மாவட்டம் முழுவதுமாக இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. காரைக்காலில், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் திருப்பட்டினம் ஆயிரம் காளியம்மன் கோவில் திருவிழா இன்று நடைப்பெற உள்ளது.
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே ஆயிரங்காளியம்மனை தரிசிக்க முடியும் என்பதால், பல பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசிக்க வருவார்கள். இதனை முன்னிட்டு காரைக்காலில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பக்தர்களின் நெரிசலைக் கண்டுப்படுத்தவும், பாதுகாப்பிற்காகவும், காரைக்கால் மாவட்டம் முழுவதுமாக இன்று ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.