முதுகலை மருத்துவ படிப்பில் சேர, நீட் தேர்வில் 0 மதிப்பெண் போதும் என விநோதமான முடிவை எடுத்துள்ளது ஒன்றிய பாஜக அரசு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது :
முதுகலை மருத்துவ படிப்பில் சேர, நீட் தேர்வில் 0 மதிப்பெண் போதும் என விநோதமான முடிவை எடுத்துள்ளது ஒன்றிய பாஜக அரசு. அப்படியானால் பணம் கொடுத்தால் போதும் மருத்துவம் படிக்கலாம் என்று பொருள்.
நீட் தேர்வுக்கும் தகுதிக்கும் எந்த தொடர்புமில்லை என இதன் மூலம் மீண்டும் அம்பலமாகியுள்ளது.
நீட் திணிப்பின் ஒரே நோக்கம், நாடு முழுவதும் பயிற்சி நிறுவனங்கள் & தனியார் மருத்துவ கல்லூரிகளின் கொள்ளைக்கு வழிவகுப்பதுதான்.
அப்பட்டமாக இதைச் செய்கிற பாஜக தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டுக்குமே விரோதமான, விரட்டியடிக்க வேண்டிய சக்தியாகும் என தனது ட்விட்டர் பதிவில் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.