தமிழகத்தின் முதல்வராக ஐந்து முறை பதவி வகித்த கலைஞர் மு.கருணாநிதியின் 101 வது பிறந்தநாள் ( kalaignar karunanidhi ) இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அரசியல், இலக்கியம் திரைப்படம், நாடகம் எனப் பல்வேறு துறைகளில் அழியாத் தடம் பதித்து தமிழ் மொழி, மாநில முன்னேற்றத்துக்குப் பெரும் பங்காற்றியவர் கலைஞர் மு.கருணாநிதி.
கலைஞர், தமிழினத் தலைவர், முத்தமிழ் அறிஞர் என்று அன்புடன் அழைக்கப்படும் கருணாநிதி 1924 ஜூன் 3 – அன்று திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளையில் பிறந்தார்.
திராவிட அரசியலில் மைல்கல்லாக இருந்த முத்துவேல் கருணாநிதி, 50 ஆண்டுகள் மக்களுக்காக உழைத்தார், தன்னுடைய 14 வயதில் போராட்ட களம் கண்டு மக்களுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்தார்.
Also Read : என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை சஸ்பெண்ட் உத்தரவு ரத்து..!!
1947ஆம் ஆண்டு ராஜகுமாரி என்ற படத்திற்கு முதன்முறையாக பணியாற்றினார் கலைஞர் கருணாநிதி. இவருடைய வசனத்தில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் பொன்னர் சங்கர் (2011).
தனது வாழ்நாளில் 21 நாடகங்கள், 69 திரைப்படங்களில் தன் உழைப்பை கலைஞர் கொடுத்துள்ளார் . எம்.ஜி. ஆருடன் சுமார் 9 படங்களில் பணியாற்றியிருக்கிறார்.
1957ஆம் ஆண்டு நடந்த பேரவை தேர்தலில் குளித்தலை தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக நின்று அதில் வெற்றியும் பெற்றார்; அப்போது அவரின் வயது வெறும் 33 தான் .
தமிழ்நாட்டில் 12 முறை எம்.எல்.ஏவாக இருந்த கலைஞரின் சாதனை இந்திய அரசியல்வாதிகளில் இதுவரை யாரும் செய்யாத சாதனையாக இது கருதப்படுகிறது.
ஏழை மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்த விஷயங்களை இலவச திட்டங்களாக அறிமுகப்படுத்தி அவர்களின் நிலையை உயர்த்திய பெருமை கலைஞரையே சேரும்.
இந்நிலையில் இன்று கலைஞர் மு.கருணாநிதியின் 101 வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மாபெரும் இந்த தலைவரின் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினர் பல்வேறு ( kalaignar karunanidhi ) நலத்திட்ட உதவிகள் செய்து கொண்டாடி வருகின்றனர்.