இலங்கையின் புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று முறைப்படி பொறுப்பேற்றுள்ளார்.
இயற்கை எழில்கொஞ்சும் இலங்கை நாட்டில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது .
இந்த வெற்றியின் மூலம் இலங்கை நாடு விழா கோலம் பூண்டுள்ள நிலையில் அந்நாட்டின் புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று முறைப்படி பொறுப்பேற்றுள்ளார். இதன்மூலம் இலங்கையின் 3வது பெண் பிரதமர் என்ற பெருமையை ஹரிணி அமரசூரிய பெற்றுள்ளார்.
Also Read : “2024 மிஸ் யுனிவர்ஸ்” பட்டத்தை வென்றார் டென்மார்க்கின் விக்டோரியா..!!
இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்கவின் முன்னிலையில் புதிய அமைச்சரவையும் இன்று பொறுப்பேற்றுள்ளது .
அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு அண்மையில் நடந்த தேர்தலில் தற்போதைய அதிபர் அநுர குமரா திசநாயக கட்சி அமோக வெற்றி பெற்றதை அடுத்து பிரச்சாரத்தின் போது அனுர குமார கொடுத்துள்ள வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றுப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.