கலாஷேத்ராவில் அருவருக்கத்தக்க பாலியல் அத்துமீறல்கள் (Kalashetra Issue) நடைபெற்றுள்ளதாக சென்னை உயர்நீதி மன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
சென்னை திருவான்மியூர் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் ருக்மணி தேவி அருண்டேல் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவி அளித்த பாலியல் அத்துமீறல் புகாரின் அடிப்படையில்,
அந்தக் கல்லூரி பேராசிரியர் ஏற்கெனவே கைதாகி பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதேபோல மற்றொரு மாணவியும், மற்றொரு பேராசிரியர் மீது பாலியல் ரீதியாக குற்றம்சாட்டி வழக்கு தொடர்ந்திருந்தார்.
சென்னை கலாஷேத்ராவில் இதேபோல் பல முறை மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த வருவதால் அவர்கள் மீது நடவடிக்கை கோரி சக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து தேசிய மகளிர் ஆணைய தலைவர் நேரில் விசாரணை நடத்திய நிலையில் மாணவிகள் நீதி வேண்டும் என முழக்கமிட்டு போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.
மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பல நாட்களாக ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் எழுந்த சம்பவம்
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அங்கு சேர்ந்து பயிலும் ஆசையே மாணவிகளுக்கு போய்விட்டதாக சில கருத்துக்கள் வெளியாகி உள்ளது.
இதையடுத்து இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், கலாஷேத்ரா அறக்கட்டளை நடத்தும் கல்வி நிறுவனங்களில், பணியிடங்களில் பெண்களுக்கான பாலியல் தொல்லை தடுப்புச் சட்டம்
போக்சோ சட்டம், பல்கலைக்கழக மானியக்குழு சட்டம் உள்ளிட்ட சட்ட விதிகளின் அடிப்படையில் பாலியல் தொல்லைகளைத் தடுக்க விரிவான கொள்கை வகுக்க உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதி அனிதா சுமந்த் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியதாவது:
‘‘மாணவிகள் அளித்த பாலியல் தொல்லை புகாரை விரைவாக விசாரிக்காததன் மூலம் கலாஷேத்ரா அறக்கட்டளை பழிச்சொல்லுக்கு ஆளாகியுள்ளது. இந்த பாலியல் ரீதியிலான விவகாரம் விரும்பத்தகாதது மட்டுமின்றி, மிகவும் கவலைக்குரிய ஒன்று.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய ஓய்வு பெற்ற நீதிபதி கே.கண்ணன் தலைமையிலான குழு அளித்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள விஷயங்கள் அருவருக்கத்தக்க வகையில் உள்ளன.
Also Read : https://itamiltv.com/mla-lasya-nandita-dies-in-car-accident/
மேலும், இதுபோன்ற நிகழ்வுகள் இனிமேல் (Kalashetra Issue) நடைபெறாத வண்ணம் தடுக்க நீதிபதி கண்ணன் குழு அளித்துள்ள பரிந்துரைகளை

அமல்படுத்துவது தொடர்பாக அறக்கட்டளை நிர்வாகம் உடனடியாக பரிசீலிக்க வேண்டும். மேலும், குற்றச்சாட்டுக்குள்ளான பேராசிரியரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.