உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ( kallalagar ) கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வு இன்று கோலாகலமாக நடைபெற்றுள்ளது.
மதுரையில் ஒவ்வரு வருடமும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் சித்திரைத் திருவிழா உலகளவில் மிக பிரபலமானது .
கோலாகலமாக நடைபெறும் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி பக்க்தர்கள் புடைசூழ வெகு விமர்சையாக நடைபெறும்.
இந்நிலையில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது .
Also Read : மோசமான திட்டத்தை இந்தியாவில் நடைமுறைப்படுத்த பார்க்கிறார்கள் – பிரதமர் மோடி
12 நாட்கள் மீனாட்சி அம்மன் கோயிலின் நான்கு மாசி வீதிகளில் பல்வேறு வாகனங்களில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளும் வீதி உலா நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்ற நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் விழா பக்தர்கள் புடைசூழ இன்று அதிகாலை கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது.
இந்த நிகழ்வில் பாரம்பரிய முறைப்படி ஆட்டு தோலால் செய்யப்பட்ட பைகளில் தண்ணீர் நிரப்பி அதனை கள்ளழகர் மீது பீச்சி அடிக்கும் நிகழ்ச்சியும் வெகுசிறப்பாக நடைபெற்றது. நடைபெறும்.
கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வை காண ஏரளமான பக்கதர்கள் வந்ததால் ( kallalagar ) அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.