இந்திய சினிமாவில் இருக்கும் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். விக்ரம் என்ற பிளாக் பஸ்டர் படத்தை கொடுத்த கையோடு இவரின் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் இந்தியன்2.
ஷங்கர் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தை லைக்கா மற்றும் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் மாபெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது .
பல வருடங்களாக பல இன்னல்களை சந்தித்த இப்படம் தற்போது டப்பிங் வரை போராடி வந்துள்ளது . ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் கமலுடன் காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
முதல் பாகத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பால் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தின் மேலும் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் இந்தியன் 2 படத்திற்காக கமல்ஹாசன் டப்பிங் செய்யும் ஸ்பெஷல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது . கமல் மற்றும் இயக்குநர் ஷங்கர் இருக்கும் இந்த தரமான வீடியோ தான் தற்போது இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது .