கந்த சஷ்டியை ஒட்டி திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கோவில் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய நாள் தோறும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர் . திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் குடும்பத்துடன் கடலில் நீராடி மகிழ்வதை வழக்கமாக வைத்துள்ளனர் .
Also Read : நாமக்கல் கவிஞர் மாளிகையில் எந்த பிரச்னையும் இல்லை – அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்..!!
தைப்பூசம் , கந்த சஷ்டி போன்ற விழாக்கள் இங்கு வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம் அந்தவகையில் எதிர்வரும் நவம்பர் 2ம் தேதி தொடங்கும் கந்த சஷ்டியை ஒட்டி திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
18 இடங்களில் பக்தர்கள் தங்க தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட உள்ளன. 225 நிரந்தர கழிவறைகள், 190 தற்காலிக கழிவறைகள் அமைக்கப்படுகின்றன.
வாகன நிறுத்தம், குடிநீர், எல்.இ.டி. திரைகள், கூடுதல் சிசிடிவி கேமராக்கள் ஏற்பாடு செய்யப்பட உள்ளதாகவும் கோவில் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.