சூர்யாவின் கங்குவா திரைப்படம் கடந்த 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில் தற்போது விமர்சனங்களுக்கும் விமர்சகர்களுக்கு நடிகை ஜோதிகா காட்டமான பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து நடிகை ஜோதிகா வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
குறைகள் இல்லாமல் படம் எடுக்க முடியாது, அதற்காக ஒட்டுமொத்த படத்தையும் குறை கூற கூடாது. படத்தின் நல்ல அம்சங்களை விமர்சகர்கள் தவிர்த்துவிட்டனர்
கங்குவா படத்தின் முதல் காட்சி முடியும் முன்பே எதிர்மறை விமர்சனங்களை வெளியிட தொடங்கிவிட்டனர்
சமீபத்தில் வெளியான இரட்டை அர்த்த வசனங்கள் இடம்பெற்ற படங்களை கூட இந்தளவுக்கு அவர்கள் விமர்சனம் செய்யவில்லை
3 மணி நேர படத்தில் முதல் அரை மணி நேரம் மட்டுமே ஆடியோ சரியில்லாமல் இருந்தது.
Also Read : உலக கேரம் போட்டியில் சாதித்த இளம் தமிழ்நாட்டு வீராங்கனை..!!
கங்குவா படத்தில் சூர்யாவின் நடிப்பு பாராட்டுக்குரிய வகையில் இருந்தது . கங்குவா படத்தில் ஒளிப்பதிவு இதுவரை தமிழ் சினிமா கண்டிராத வகையில் உள்ளது
இதை நான் சூர்யாவின் மனைவியாக கூறவில்லை, சினிமா பிரியராக கூறுகிறேன் என ஜோதிகா தெரிவித்துள்ளார்.
நடிகை ஜோதிகாவின் இந்த பதிவுக்கு தற்போது நடிகர்கள் மற்றும் நடிகைகள் பலத்த ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.