சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்திற்காக கங்குவா படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெறித்தனமாக உருவாகி உள்ள திரைப்படம் கங்குவா இப்படம் ஆக்டொபர் 10 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் உளப்பட பெரும் நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ள வேட்டையன் படமும் ஆக்டொபர் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் முதலில் எந்த படத்தை பார்ப்பது என்ற குழப்பத்தில் ரசிகர்கள் இருந்து வந்த நிலையில் வேட்டையனுக்காக கங்குவா வழிவிடுவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
Also Read : காதலிக்கு கஞ்சாவை அறிமுகப்படுத்திய காதலன் – விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!
கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் மெய்யழகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய நடிகர் சூர்யா கூறியதாவது :
மூத்தவர், சினிமாவின் அடையாளம், 50 ஆண்டுகளாக நடித்து வருகிறார் என்பதால் ரஜினிகாந்த் படத்திற்கு வழிவிடுவோம்.
கங்குவா ஒரு குழந்தை. அதை நீங்கள் பார்த்துக் கொள்வீர்கள் – படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என நடிகர் சூர்யா அறிவித்துள்ளார்.
ரஜினி நடிக்கும் வேட்டையன், சூர்யாவின் கங்குவா ஆகிய 2 படங்களும் அக்.10 தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சூர்யாவின் இந்த அறிவிப்பு இவர்களது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.