காரைக்காலில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் அரசு ஊழியர்கள் குறித்து ஆன்லைன் மூலம் புகார்களை பதிவு செய்ய புதிய செயலி ஒன்று அறிமுக படுத்தப்பட்டுள்ளது.
வாகனங்களை சாலைகளை முறைப்படி ஓட்டுவது குறித்தும் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும் நாளுக்கு நாள் ஏராளமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது . இருப்பினும் இன்றையகால் இளசுகள் அதனை எதையும் பொருட்படுத்தாமல் வயது கோளாறில் ஏடாகூட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கெல்லாம் மேல் பொதுமக்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டிய அரசு ஊழியர்களும் தங்களது பொறுப்புகளை உணராமல் சாலை விதிகளை மீறுவதாக புகார்கள் எழுந்து வருகிறது.
Also Read : வங்கதேசத்திற்கு பிரதமர் மோடி கொடுத்த கோயில் கிரீடம் மாயம்..!!
இந்நிலையில் காரைக்காலில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் அரசு ஊழியர்கள் குறித்து ஆன்லைன் மூலம் புகார்களை பதிவு செய்ய புதிய செயலி ஒன்று அறிமுக படுத்தப்பட்டுள்ளது.
‘காரை காவலன் (KARAIKAVALAN) என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த செயலியில் டிஜிட்டல்/ புகைப்பட ஆதாரங்களுடன் பொதுமக்கள் பதிவு செய்யலாம்
இதுமட்டுமின்றி அரசு ஊழியர்கள் பொதுமக்களுக்கு முன் உதாரணமாக தலைக்கவசம் அணிய வேண்டுமென மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.