நடிகர் கார்த்தியின் நடிப்பில் தற்போது சர்தார் திரைப்படம் வெளியானது.இந்த வருடத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் ஏற்கனவே பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி இருந்தது.இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை செய்தது.
அண்மையில் வெளியான கார்த்தியின் சர்தார் திரைப்படமும் வசூலில் செம கலெக்ஷன் செய்துள்ளது.முதல் வாரத்தில் 380 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட்டது.இரண்டாவது வாரத்தில் 500 திரையரங்குகளில் ஒளிபரப்பானதையடுத்து இந்த திரைப்படத்திற்கு அமோகமான விமர்சனம் கிடைத்தது.
அக்டோபர் 21ஆம் தேதி வெளியான சர்தார் திரைப்படம் 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது உலகம் முழுவதும் பல திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் தற்போது வரை 85 கோடி வசூலித்து லாபத்தை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.சர்தார் திரைப்படத்தை பிஎஸ் மித்ரன் இயக்கியுள்ளார்.சர்தார் திரைப்படத்தின் இந்த வசூல் பிரின்ஸ் திரைப்படத்தின் வசூலை விட அதிகம் என்பது குறிப்பிடதக்கது.