திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடக்கியுள்ளது .
உலக பிரசித்திபெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி , வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான மக்கள் வந்து சாமி தாிசனம் செய்து வருகின்றனர் .
அதிலும் குறிப்பாக ஒவ்வொரு மாதம் பௌர்ணமியின் போது , ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர் . மேலும் இக்கோயிலில் கார்த்திகை தீப திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.
மாதமாதம் பௌர்ணமி நாளில் கிரிவலம் செல்றாலும், கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் நாளில் , கிரிவலம் செல்வது சிறப்பு மிக்கதாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது.
அண்ணாமலையார் சன்னதி அருகே உள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் கொடியேற்றும் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்வின் பொது அண்ணாமலையாரை தரிசிக்க உள்ளூர் மட்டுமின்றி , வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்கதர்கள் வந்திருந்தனர்.