கால அவகாசம் கேட்ட எஸ்பிஐ வங்கியின் விண்ணப்பத்தை தூக்கி எறிந்து( karthi) நாளைக்குள் முழுத் தகவலை வெளியிட உத்தரவிட்ட உச்சநீதிமன்றத்தின் செயலுக்கு காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை இன்று சந்தித்த கார்த்தி சிதம்பரம் கூறியதாவது :
எஸ்பிஐ கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரி விண்ணப்பித்திருக்கவே கூடாது. உச்சநீதிமன்றம் அவர்களின் விண்ணப்பத்தை தூக்கி எறிந்துவிட்டு நாளைக்குள் முழுத் தகவலை வெளியிட வேண்டும் என்று கூறியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்திய மக்களுக்கு இவற்றை அறிந்து கொள்ளும் உரிமை உண்டு. தேர்தல் பத்திரத்தை வாங்கியவர்கள் யார், பயனாளிகள் யார், அவர்களுக்குப் பங்களித்த எவருக்கும் அரசாங்கத்தால் ஏதேனும் ஆதாயம் வழங்கப்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
2027 வரை பதவிக்காலம் உள்ள ஒரு தேர்தல் ஆணையர் திடீரென ராஜினாமா செய்வது பல கேள்விகளை எழுப்புகிறது.
மிகப்பெரிய நிகழ்வை அவர் கண்காணிக்கப் போகிறார். திமுக தலைமையிலான (karthi) இந்தியக் கூட்டணி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறும் என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.