அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட பகுதிகளில் ஒன்றான கிளாம்பாக்கத்தில் விரைவில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஒன்று கிளாம்பாக்கம் . போக்குவரத்து நெரிசல் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியில் செல்ல சிரமப்பட்டு வந்த நிலையில் அங்கு புதிய ரயில் நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .
பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து என இரண்டும் அமையுள்ள செய்தி அப்பகுதி மக்களிடையியே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் இதற்கான பணி இன்னும் முழுமையாக நிறைவடையாததால் இன்று வர அப்பகுதி மக்கள் கடும் சிரமத்தில் தான் தங்களது பயணத்தி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் எப்பதான் இந்த பேருந்து நிலையம் திறக்கபடும் என ஆவலுடன் காத்திருந்த அப்பகுதி மக்களுக்காக மகிழ்ச்சி தரும் குட்டி தகவல் ஒன்று கிடைத்துள்ளது . அதன்படி கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வரும் பொங்கல் பண்டிகைக்குள் திறக்க முடிவு செய்திருப்பதாக டக்கர் தகவல் வெளியாகி உள்ளது .
இதற்கான ஒத்திகை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், பொங்கலை ஒட்டி வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளதாக சி.எம்.டி.ஏ. தகவல் தெரிவித்துள்ளது.