இந்தியா( India) – வெஸ்ட் இண்டீஸ்(West Indies) அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி குயின்ஸ் ஓவல் பார்க் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட மோசமான தோல்வியை சரி செய்ய வெஸ்ட் இண்டீஸ் அணியும், தனது அபார வெற்றி பயணத்தை தொடர இந்திய அணியும் திவீர முனைப்பு காட்டும் என்பதால், இந்த போட்டியின் மீது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு வைத்துள்ளனர்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதல் டெஸ்ட் போட்டியில் அசாத்திய ஆட்டத்தை வெளிக்காட்டிய ஜெய்ஸ்வால் இந்த போட்டியிலும் சிறப்பாக விளையாடி அரை சதம் கடந்தார். இவருக்கு பக்க பலமாக அணியிபன் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடி அணிக்கு தேவையான ரன்களை அரம்பத்திலே குவித்தார். சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் 54 ரன்னிலும், சதமடிப்பார் என எதிர்பார்த்த அணியின் தலைவர் ரோஹித் ஷர்மா 80 ரன்னில் வெளியேறினார்.
பின்னர் வந்த கில், ரகானே அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சியாளித்தனர். 5 விக்கெட்டுக்கு கோலியுடன் ஜோடி சேர்ந்த ஜடேஜா நிதானமாக பார்ட்னர்ஷிப் கொடுத்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். ஒரு முனையில் சிறப்பாக ஆடிய கோலி அரை சதம் கடந்தார். முதல் நாள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் குவித்துள்ளது. கோலி 87 ரன்களும், ஜடேஜா 36 ரன்களுடனும் களத்திலுள்ளனர்.