கொங்கன் ரயில்வே நிறுவனத்தில் Trainee Apprentices பணிக்கு மொத்தம் 190 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே நிறுவனத்தின் கீழ் செயல்படும் கொங்கன் ரயில்வே, அனைத்து மண்டலங்களுக்கும் இடையில் சேவை வழங்கும் பொதுவான ரயில்வே அமைப்ப்பு.
மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் கொங்கன் ரயில் நிறுவனத்தில் பயிற்சி அப்ரண்டிஸ்கள் பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Trainee Apprentices பணிக்கு அறிவிக்கப்பட்டுள்ள மொத்தம் உள்ள 190 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் டிசம்பர் 10ம் தேதிக்குள் வின்னப்பிக்க் வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பொறியியலில் பட்டப்படிப்பு / டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்/எஸ்டி/ பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 முதல் 27 வயது இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.9,000/- உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.