தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த தக்காளி விலை கடும் சரிவை சந்தித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக சென்னை கோயம்பேட்டில் தக்காளியின் விலை கிடுகிடு என அதிகரித்து 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. தொடர் மழை, வரத்துக் குறைவு உள்ளிட்ட காரணங்களால் விலை அதிகரித்தத்தாக கூறப்பட்டது.
இதனை அடுத்து தக்காளி விலையை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அதன் படி ரேசன் கடைகள், பசுமை பண்ணை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து படிப்படியாக தக்காளி விலை குறையத் தொடங்கி கிலோவிற்கு 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி 15 ரூபாய் முதல் 25 ரூபாய் என ரகம் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி அறுவடை காலம் என்பதால் வரத்து அதிகரித்துள்ளதால் தக்காளி விலை குறைந்துள்ளது.
அதே போல் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இஞ்சி விலை இன்று ரூ220 முதல் ரூ240 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒரு சில வாரங்களாக ரூ150 முதல் ரூ200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட இஞ்சி இன்று மேலும் அதிகரித்துள்ளது.
அதே போல் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 70 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதே போல் பீட்ரூட் 40 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு 30 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், சுரைக்காய் 20 ரூபாய்க்கும், அவரைக்காய் 55 ரூபாய்க்கும், முருங்கைக்காய் 20 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், விற்பனையாகிறது.