பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற சூப்பர் ஹிட் நிகழ்ச்சியின் மூலம் காமெடியனாக அறிமுகமான, பலர் இன்று வெள்ளித்திரையில் முன்னணி நடிகர்களாக ஜொலித்துக்கொண்டிருக்கின்றனர் . இதற்க்கு மிகப்பெரிய உதாரணம் நம்ப வீட்டு பிள்ளை சிவகார்த்திகேயன் தான் .
சிவகார்த்திகேயனை தொடர்ந்து , சந்தானம் , ரோபோ சங்கர், ராமர், தீனா என பல திறமைசாலிகள் பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி கதாபாத்திரத்திலும் குணச்சித்திர வேடங்களிலும் கலக்கி வருகிறார்கள்.
அந்த வகையில் பலருக்கும் மிகவும் பிடித்த KPY போட்டியாளராகவும், சுட்டித்தனமான தொகுப்பாளராகவும் வலம் வந்தவர் தீனா. எந்த பிரபலம் குறித்து இவரிடம் கேள்வி ஏழுப்பினாலும் மிகவும் சைலெண்டாக கமெண்டுகளை சொல்லி அவர்களை மனதார சிரிக்க வைத்து விடுவார்.
திருவாரூரை பூர்விகமாக கொண்ட தீனா, KPY நிகழ்ச்சியின் துணை இயக்குனராக இருந்து பின்னர், போட்டியாளராக மாறி தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் பல குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார் .
அடுத்தடுத்து படங்களில் கமிட்டானதால் தன்னுடைய சொந்த ஊரில் பிரமாண்டமான வீடு ஒன்றை கட்டிய தீனாவுக்கு திருமணம் நடைபெற உள்ளதாம் .
திருவாரூரில் திருமணத்தை முடித்துக்கொண்டு பின்னர் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது . இதில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையை சேர்ந்த பலர் கலந்து கொள்வார்கள் என எதிரிபார்க்கப்படுகிறது.
தீனாவை திருமணம் செய்ய உள்ள அந்த பெண் குறித்து வெளியாகியுள்ள தகவலில், அவர் ஒரு கிராபிக் டிசைனர் என்றும், இது முழுக்க முழுக்க பெற்றோர் பார்த்து முறைப்படி நடத்தி வைக்கும் திருமணம் என்றும்,கூறப்படுகிறது.
இந்நிலையில் தீனாவின் திருமண செய்தியை அறிந்த அவரது ரசிகர்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களை மனதார தெரிவித்து வருகிறார்கள்.