கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு கருணைத் தொகை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
போலி என்.சி.சி. முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
சம்பவம் தொடர்பாக இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும், பாதிக்கப்பட்ட 23 மாணவிகள் மற்றும் 219 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசுத் தரப்பு விளக்கம் கொடுத்தது.
இதையடுத்து கிருஷ்ணகிரியை உலுக்கிய இந்த வழக்கு தொடர்பான விரிவான அறிக்கையை இரண்டு வாரங்களில் தாக்கல் செய்யவும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
அத்துடன் இந்த பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிகள் 23 பேரில் 2 பேருக்கு தலா 5 லட்சமும், மற்றவர்களுக்கு தலா 1 லட்சமும் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .